
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்காமல், கிராமத்தில் உள்ள வவ்வால்களுக்காக, 27 ஆண்டுகளாக கிராம மக்கள் தியாகம் செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோப்புப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் வவ்வால்களுக்காக அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் 27 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான். ஆனால் பட்டாசுகள் வெடித்தால் வவ்வால்களுக்காக கடந்த 27 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் தோப்புப்பட்டி கிராம மக்கள்.
இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு சுமார் 20,000க்கு மேற்பட்ட வவ்வால்கள் உள்ளன. பட்டாசு சத்தம் கேட்டால் வவ்வால்களுக்கு இடையூறு ஏற்படும், அல்லது இந்த இடங்களை விட்டு வெளியேறி விடுமோ என்ற நோக்கில் இந்த கிராமத்தினர் பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனர்.