தீபாவளிக்கு கிஃப்ட் பார்சல் - பட்டாசு சோதனையில் 15 கிலோ கஞ்சா சிக்கியது

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 11:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
தீபாவளிக்கு கிஃப்ட் பார்சல் - பட்டாசு சோதனையில் 15 கிலோ கஞ்சா சிக்கியது

சுருக்கம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தீபாவளி கிஃப்ட் பார்சல் போல், 15 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எரி பொருட்களை ரயில்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பட்டாசு வகைகளை கொண்டு சென்றால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று ஏராளமான மக்கள், தங்களது சொந்த ஊர் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், எரி பொருட்கள், பட்டாசு வகைகளை பயணிகள் கொண்டு செல்கிறார்களா என தீவிரமாக சோதனை நடத்தினர்.

மேலும் நகைப்பறிப்பு, பிக்பாக்கெட் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்கு மாறு வேடத்தில் போலீசார் தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தனர்.

அப்போது ரயில் நிலைய வளாகத்துக்குள் 2 பேர், சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களை அழைத்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அவர்களிடம் இருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 15 கிலோ கஞ்சா இருப்பதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 பிடிபட்ட 2 பேரையும், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கடராவ் (45). இவரது உறவினர் மச்சைராஜ் (21) என தெரிந்தது.

மேலும் விசாரணையில், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை ரெயில் மூலம் கடத்தி வந்து, சென்னையில் இருந்து மின்சார ரயில் மூலம் மீஞ்சூருக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி