#Chennai Floods சற்று முன் - சென்னையில் 11 சுரங்கங்கள், 7 சாலைகள் மூடல்... மக்கள் வெளியே வர வேண்டாம்...

Published : Nov 11, 2021, 01:45 PM IST
#Chennai Floods சற்று முன் - சென்னையில் 11 சுரங்கங்கள், 7 சாலைகள் மூடல்... மக்கள் வெளியே வர வேண்டாம்...

சுருக்கம்

கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகளும், 7 சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விவரம் இதோ...

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசால் அரிவுறுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர் முழு வீச்சில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை சென்னை அருகே புயல் கரை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பெரு நகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெள்ளம் காரணமாக,

1. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
2. தியாகராயர் பகுதியில் மேட்லி சுரங்கப்பாதை,
3. கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை
4. கொருக்குப்பேட்டை சுரங்கப்பாதை
5. அஜாக்ஸ் சுரங்கப்பாதை
6.கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை
7.பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
8 .தாம்பரம் சுரங்கப்பாதை
9. கணேசபுரம் சுரங்கப்பாதை
10. வியாசர்பாடி சுரங்கப்பாதை
11. அரங்கநாதன் சுரங்கப்பாதை

ஆகிய சுரங்கப்பாதைகள் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

மேலும், சென்னையில் 7 சாலைகளிலும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கேகே நகர் - ராஜ மன்னார் சாலை.
மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை.
ஈ வி ஆர் சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை.
செம்பியம் - ஜவஹர் நகர்.
பெரவள்ளுர் - 70 அடி சாலை.
புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு
வியாசர்பாடி - முல்லை நகர் பாலம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அவசியமின்றி வீடுகளை விடு வெளியே வரவேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 09 December 2025: மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..