Chennai Flood: அடுத்த 3 மணிநேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.. வானிலை மையம் வார்னிங்..!

By vinoth kumarFirst Published Nov 11, 2021, 11:53 AM IST
Highlights

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. அந்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க உள்ளது. இன்று மாலை காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே அது கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. அந்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க உள்ளது. இன்று மாலை காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே அது கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில்  இதன் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுகிறது. சென்னையில் நேற்று மாலை பெய்ய ஆரம்பித்த மழை விடிய விடிய சூறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்து வருகிறது. மழை விட்டு விட்டு பெய்தாலும்  இன்னும் ஓயாமல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாத நிலை உள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு  பகுதிகளில் வெள்ளம் கடல் போல காட்சியளிக்கிறது. மேலும்,  கனமழை பெய்து வருவதன் காரணமாக சுரங்க பாதைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து, தி.நகர், திருவொற்றியூர், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, கணேஷபுரம் உள்ளிட்ட 11 சுரங்கப்பாதைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், வானிலை ஆய்வு மைய  இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்;- மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. மேலும் இது வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!