Chennai Floods: சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. மோசமான நிலை முடிந்துவிட்டது.. வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்.!

By vinoth kumarFirst Published Nov 11, 2021, 11:04 AM IST
Highlights

வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்று தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

மோசமான காலம் முடிந்துவிட்டது. இனி சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்று தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.  ஆந்திரமாநில ஸ்ரீஹரிகோட்டா வட சென்னைக்கு இடையில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நேற்று இரவு தொடங்கி சென்னையில் சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்துவருகிறது. 

கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருசில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், சென்னை மோசமான நிலையை கடந்துவிட்டதாகவும்,  அவ்வபோது மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது முகநூல் பக்கத்தில்;- மோசம் முடிந்து எப்போதாவது மழை பெய்யும். வட சென்னை ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டை வடசென்னை கடக்கும் வரை காற்று அடிக்கும். சென்னை மற்றும் கேடிசி பெல்ட்டில் சராசரியாக 150 மிமீ மழை பெய்தது மேலும் சில நிலையங்களில் 200 மிமீ மழையும் கடந்துள்ளது.

இன்று நீண்ட இடைவெளிகளிலேயே மழை பெய்யும். இன்றைக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு அபாயகர சூழல் ஏதுமில்லை. காற்றும் மட்டும் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் புள்ளி வலுவிழந்ததாகக் காணப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழையளவு: (mm)

* தாம்பரம் - 233
* சோழவரம் - 220
* எண்ணூர்- 207
* குமிடிபூண்டி- 184
* ரெதில்ஸ் - 180
* மாமல்லபுரம்- 169
* ஆல்வார்பேட்- 162
* நுங்கம்பாக்கம்- 157
* டிஜிபி அலுவலகம் மயிலாப்பூர் - 157
* பெரம்பூர்- 157
* எம்ஆர்சி நகர்- 151
* தாமரைப்பாக்கம்- 149
* அம்பத்தூர்- 149
* கே.கே.நகர்- 145
* மீனம்பாக்கம்- 144
* அயனாவரம்- 144
* ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (வானகரம்) - 142
* தரமணி- 140
* அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி) - 139
* கத்திவாக்கம் - 137
* செம்பரம்பாக்கம்- 135
* வில்லிவாக்கம் - 131
* முகப்பேர் - 130
* மணலி - 128
* பொன்னேரி - 125
* சத்யபாமா பல்கலைக்கழகம் (சோழிங்கநல்லூர்) - 124
* ஆலந்தூர்- 121
* அண்ணா நகர் - 120
* தொண்டியார் பேட்- 120
* கேளம்பாக்கம்- 119
* திருப்போரூர் - 117
* திருவொற்றியூர்- 115
* திருக்கழுகுன்றம்- 113
* மேற்கு தாம்பரம்- 111
* செங்கல்பட்டு- 104
* இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (கேளம்பாக்கம்) - 103
* ஸ்ரீபெரும்புதூர்- 102
* திருவள்ளூர்- 100* செய்யூர்- 100 மழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

click me!