Gold Rate Today : தங்கம் விலை கிடு கிடு உயர்வு.. இன்றைய விலை என்ன?

Published : Nov 11, 2021, 11:07 AM ISTUpdated : Nov 15, 2021, 09:58 AM IST
Gold Rate Today : தங்கம் விலை கிடு கிடு உயர்வு.. இன்றைய விலை என்ன?

சுருக்கம்

Gold Rate Today : கடந்த மூன்று நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது. இன்றைய தங்கம் விலை இதோ...

ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 75 ரூபாய் உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட வர்த்தக நெருக்கடிகள் காரணமாக, முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் முதலீடுகளை பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் ஆகியவற்றிலிருந்து மாற்றத் தொடங்கியிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைத்து காலகட்டத்துக்குமான பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தேவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளது. சர்வதேச அளவிலும் கொரோனாவுக்குப் பிறகு வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருவதால், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதைலீடு அதிகரித்துள்ளது.

இன்றும் தங்கம் விலை உயர்வுடனேயே உள்ளது. ஒரு கிராம் தங்கம் (22 காரட்) 75 ரூபாய் உயர்வு கண்டு 4,620 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை (22 காரட்)  600 ரூபாய் உயர்வு கண்டு 36,960 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் 82 ரூபாய் உயர்ந்து 5,040 ரூபாயாகவும், ஒரு சவரன் 656 ரூபாய் உயர்வு கண்டு 40,320 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 60 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்