வாங்க… வாங்க… ஹூட் செயலியில் சீமான்… வரவேற்று ட்வீட் போட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்

Published : Nov 10, 2021, 10:17 PM ISTUpdated : Nov 10, 2021, 10:18 PM IST
வாங்க… வாங்க… ஹூட் செயலியில் சீமான்… வரவேற்று ட்வீட் போட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்

சுருக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவின் ஹூட் செயலியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவின் ஹூட் செயலியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளார்.

இப்போது இருப்பது டிஜிட்டல் உலகம். நமது பேண்ட், சட்டையில் பணம் இருக்கிறதோ இல்லையோ… கட்டாயம் அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. அதில் பல வீடியோக்கள் படம் பிடிக்கப்படுகின்றன. அவை நல்லதுக்கும் சரி… அல்லதுக்கும் பயன்படுகிறது.

டிஜிட்டல் உலகம் படு ஸ்பீடாக போய் கொண்டு இருக்கும் தருணத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்து வருகின்றனர்.

புதிய, புதிய செயலியில் தங்களை ஐக்கியப்படுத்தி கொண்டு உள்ளனர். அப்படித்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஹூட் செயலியில் ஜாய்ன் பண்ணி உள்ளார்.

ஹூட் செயலியானது உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ஆரம்பித்த செயலியாகும். அண்மையில் தான் இதனை ஆரம்பித்து வைத்தார் ரஜினிகாந்த்.

மற்ற செயலிக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இந்த செயலியில் குரல் வழியாக தமது கருத்துகளை பதிவு செய்யலாம். ஹூட் செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் டவுன்லோட் செய்துள்ளனர்.

அந்த வரிசையில் இப்போது நாம் தமிழர் சீமானும் இந்த செயலியை டவுன்லோடு செய்திருக்கிறார். சீமானின் இந்த நடவடிக்கையை அறிந்த சவுந்தர்யா அவரை வரவேற்று டுவிட்டர் வெல்கம் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

ஹூட் செயலிக்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டு வரவேற்று உள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்த செயலியில் சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து உள்ளனர்.

சவுந்தர்யாவின் ஹூட் செயலியில் சீமான் இணைந்துள்ளதை அறிந்த அவரது தம்பிகளும் அதை டவுன்லோட் செய்ய ஆரம்பித்து உள்ளனர். சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவ்வாக இருப்பவர்கள் நாம் தமிழர் கட்சியினர்.

அதிலும் நாம் தமிழர் கட்சியினரின் இளைஞர் பட்டாளம் சமூக வலைதளங்களில் வேகமாக இயங்கி வருவது அனைவரும் அறிந்தததே. சீமானின் அறிக்கைகள், பேச்சுகள், பேட்டிகள் போன்றவை சமூக வலைதளத்தில் வேகமாக உலா வரும். இது தவிர ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள், கண்டனங்கள், கட்சியினரின் கூட்டங்கள் என படு ஸ்பீடாக நாம்  தமிழர் பக்கங்கள் இருக்கும்.

ஹூட் செயலியில் சீமான் இணைந்துள்ளதை அறிந்த நாம் தமிழர் தம்பிகளும் அந்த செயலியை நோக்கி தங்களது கவனத்தை திருப்பி இருக்கின்றனர். விரைவில் அவர்களும் ஹூட்டில் இணையலாம் என்று எதிர்பார்க்கலாம்…!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி
ADMK Clash | மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?!