சென்னை தினம்: மக்களே மிஸ் பண்ணாதீங்க; நம்ம சென்னை - நம்ம பெருமை சிறப்பு கலை நிகழ்ச்சிகள்!!

By Thanalakshmi VFirst Published Aug 19, 2022, 1:32 PM IST
Highlights

சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற பெயரில் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது.  இதனால் நாளை , நாளை மறுநாள் பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரைப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலையில் வரும் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் இதில், மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் மெட்ராசாக உருவான நம்முடைய சென்னையை கொண்டாடும் வகையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து "சென்னை தினத்தை" பெசன்ட் நகர், எலியட்ஸ் சாலையில் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளது.

மேலும் படிக்க:வடபழனி நிதி நிறுவனத்தில் கொள்ளை.. முகமூடி கும்பலை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்.. வெளியான திடுக்கிடும் தகவல்

இந்த நிகழ்ச்சியில் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவையும், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தடுப்பூசி முகாம்கள் மற்றும் இயற்கை உர விற்பனைக்கான கடைகள் அமைக்கப்பட உள்ளன.இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்துடன் இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கைபேசிகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் "செல்ஃபி பூத்"கள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை! மனதை கலங்க வைக்கும் ஷாக்கிங் நியூஸ்! ஒரே காவலர் 17 முறை துப்பாக்கி சூடு

ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளில் ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்தத் தினத்தை கொண்டாட பிரத்யேகமாக பாடல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

சிங்கார சென்னையாக வளர்ந்து இன்று பிரமாண்ட பரிமாணத்தில் பல பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, எல்லோருடைய மனதிலும் ஒரு உணர்வுபூர்வமான இடத்தை அடைந்திருக்கும் நம் சென்னையை கொண்டாட “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற உணர்வுடன் பொதுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெறும் சென்னை தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தென்காசியில் 2 வாரங்களுக்கு 144 தடை உத்தரவு.. இன்று முதல் அமல்.. காரணம் என்ன தெரியுமா..?

இந்நிலையில் இரண்டு தினங்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதால அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெசன்ட் நகர் 6-வது நிழற்சாலை முதல் போலீஸ் பூத் முதல் மீன் கடை வரை சுமார் 850 மீட்டர் தூரத்திற்கு 20-ம் தேதி மாலை 6 மணி முதல் 22ம் தேதி மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

click me!