Chennai Corporation : சென்னை மாநகராட்சியோடு இணையும் புதிய ஊர்கள்.! எந்த எந்த ஊராட்சிகள் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published May 26, 2024, 10:10 PM IST

சென்னை மாநகராட்சியை விரிவாக்கும் செய்யும் பணி தொடங்கப்படவுள்ளது. அதன் படி பரந்தூர், மேடவாக்கம், வானகரம், அயனம்பாக்கம், அடையாலம்பட்டு இணைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


சென்னை மாநகராட்சி விரிவாக்கம்

மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளின பரப்பளவு முடிவு செய்யபடும். இதன் காரணமாக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். உலக வங்கி நிதி உதவியும் அதிகம் பெற முடியும். சென்னை மாநகராட்சி விரிவடையும் போது வரி வருவாய் பெருகும். அந்த வகையில்  சென்னை தற்போது 1189 சதுர கிலோ மீட்டர் அளவில் உள்ளது. இந்த நிலையில்தான் சென்னையை 4 மடங்கிற்கும் மேல் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சென்னையை 5,904 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

புதிய நகராட்சிகள் இணைப்பு

நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை கொண்டு வரும் நோக்கில் 2011-ம் ஆண்டு சென்னை புறநகரில் இருந்த 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகைள இணைத்து 424 சதுர கி.மீ. பரப்பளவில் சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 8 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து 250 வார்டுகளாக மாற்றப்பட உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் இருந்து 1225 கிராமங்கள் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளன. அதன்படி ஆலந்தூர் தொகுதியில் உள்ள மூவரசம்பட்டு, அய்யப்பன் தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பரணிப் புத்தூர், மவுலிவாக்கம், தரப்பாக்கம், கோவூர் ஆகிய இடங்கள் சேர்க்கப்படவுள்ளது. 

விரிவடையும் தாம்பரம் மாநகராட்சி

மதுரவாயல் தொகுதியில் உள்ள வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செந்நீர்குப்பம், நசரத்பேட்டை, பேம்பூர், அகரம் மேல், வரதராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகள் இணையவுள்ளது. திருப்போரூர் தொகுதியில் உள்ள நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, புதுப்பாக்கம், கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், பொன்னேரி தொகுதியில் உள்ள விச்சூர், வெள்ளிவாயல் சாவடி உள்ளிட்ட மாநகராட்சி இணைகிறது. மேலும் சென்னை மாநகராட்சி போன்று தாம்பரம் மாநகராட்சியில் திரிசூலம், பொழிச்சலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

வன்மத்தைக் கக்குகிறார்கள்.. வதந்திகளைப் பரப்புகிறார்கள்.. தோல்வி பயத்தில் குரல் நடுங்குவது தெரிகிறது- ஸ்டாலின்
 

click me!