வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு... அறுவை சிகிச்சை - துரை வைகோ தகவல்!

Published : May 26, 2024, 04:45 PM IST
வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு... அறுவை சிகிச்சை - துரை வைகோ தகவல்!

சுருக்கம்

கால்  தடுமாறி விழுந்ததில் வைகோவின் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார்

மதிமுக குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேலின் இல்லத் திருமண விழா இன்று நாகர்கோவில் அடுத்த இடலாக்குடியில் நடைபெற்றது. இதில் மதிமுக பொது செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், துரை வைகோ மட்டும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், கால்  தடுமாறி விழுந்ததில் வைகோவின் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து துரை வைகோ தனது எக்ஸ் பக்கத்தில், “மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக  இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். 

 

 

எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால்  தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். 

கரையை கடக்கும் ரீமல் புயல்: தயார் நிலையில் இந்திய கடற்படை - மத்திய பாதுகாப்பு அமைச்சகம்!

சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!