இனி இந்த நேரங்களில் எல்லாம் சாலைகளில் தான் நிற்கனும்.! ஏட்டு முதல் இணை ஆணையர்கள் வரை செக் வைத்த கமிஷனர்

By Ajmal KhanFirst Published Jul 22, 2024, 9:45 AM IST
Highlights

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையிலும், சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில்  காலை 7 முதல் 10 வரை, மாலை 5 முதல் 8 மணி வரை சாலைகளில் தான் போலீசார் நிற்க வேண்டும் என சென்னை கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

சென்னையில் குற்ற சம்பவங்கள்

தமிழகத்தில் தொடர் கொலைகள் சட்டம் ஒழுங்கு கேள்வி எழுந்தது. குறிப்பாக தலைநகரான சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து அதிரடியாக போலீஸ் அதிகாரிகளை மாற்றம் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்த வகையில் சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டு புதிய ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார்.

Latest Videos

பதவியேற்ற உடனையே ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் சொல்லிக் கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன் காரணமாக ரவுடிகள் வேறு மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். ஓருசிலர் தலைமறைவானார்கள். ரவுடிகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று போலீசார் கணக்கெடுத்து எச்சரிக்கை விடுத்தனர். 

Senthil Balaji : செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு.? மருத்துவர்கள் கூறியது என்ன.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ

இனி சாலைகளில் நிற்கனும்

இந்தநிலையில் அடுத்ததாக போலீசாருக்கு செக் வைத்த கமிஷனர், இனி காவல்நிலையத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பதை தவிர்த்து களத்தில் இறங்க உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் காலையில் 7 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 8 மணி வரையும் காவலர்கள் முதல் இணை கமிஷனர்கள் வரை அனைவரும் சாலையில்தான் நிற்க வேண்டும் அல்லது ரோந்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார். போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்கள் போலீஸ் நிலையத்திலோ, உதவி கமிஷனர்கள் முதல் இணை கமிஷனர்கள் வரை உள்ளவர்கள் அலுவலகத்திலோ இருக்கக் கூடாது. அவ்வாறு இந்த நேரங்களில் காவல்நிலையத்தில் இருப்பது தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

பாதுகாப்பு பணியில் காவலர்கள் முதல் இணை கமிஷனர்கள் வரை சென்றிருக்கும் நேரத்தில் காவல்நிலையத்தில் ரைட்டர் மற்றும் வரவேற்பாளர், பாரா காவலர் மட்டுமே இருக்க வேண்டும். புகார்கள் வந்தால், ரைட்டர் அதை விசாரித்து, ரோந்து பணி அல்லது சாலையில் பாதுகாப்பு பணியில் உள்ள எஸ்.ஐ.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு சொல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளியில் வந்திருப்பது தெரிந்தால், அவர்களின் வீடுகளுக்கு வாரம் ஒருமுறையாவது சென்று விசாரிக்க வேண்டும்.

இரவு பணிகளை கண்காணியுங்கள்

அவர்களது வீடுகளில் சோதனையிட வேண்டும் என சென்னை கமிஷனர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இரவு ரோந்துப் பணிகளை காவல்துறை இணை ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். இரவு மற்றும் காலை நேரங்களில் போலீசார்  என்ன பணி செய்தார்கள், முக்கிய குற்றவாளிகளை இரவில் கைது செய்தார்களா என்பதை சென்னை கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனி கட்டிடத்திற்கு அனுமதி வாங்க அரசு அலுவலகத்திற்கு அலையவேண்டியதில்லை.. விண்ணப்பிக்க புதிய லிங்க் அறிமுகம்

click me!