
சென்னை எக்மோர் பகுதியில் அமைந்துள்ள கோ ஆப்டெக்ஸ் துணிக்கடையின் பின் பக்கத்தில் திடீர் என இன்று காலை தீ விபத்து ஏற்ப்பட்டது. அருகே இருந்தவர்கள் இந்த தகவலை உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரார்கள் இரண்டு மணிநேரம் போராடி அணைத்தனர். மின் கம்பம் உரசியதால், தீவிபத்து ஏற்ப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.