
மானத்தை வாங்கிய மருத்துவமனை நட்பு...நம்பி வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கொடுத்து காம வெறியனாக மாறிய நண்பன்..!
தருமபுரி மாவட்ட மொரப்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் கணவரால் கைவிடப் பட்டவர்.
இவர் தனது தாத்தா சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் இருந்துள்ளார். இவருடைய அம்மா வாய் பேச முடியாத நபர் என்பது குறிப்பிடத்தக்கது
அப்போது பக்கத்துக்கு படுக்கையில் நோயாளியாக இருந்த ஒரு நபரின் உறவினர் நவீன் மாலிக் என்பவர், இந்த பெண்ணிற்கு உதவி செய்து வந்து உள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெரும் தனது தாத்தாவுக்கு உதவி செய்து வந்தால், தனது மனதை பறிகொடுத்த இந்த இளம்பெண் நவீன் பாலியுடன் சில காலம் போனில் பேசி நட்பு தொடர்ந்து உள்ளார். பின்னர் அது காதலாக மாறி உள்ளது.. நவீன் பாலி அந்த பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அவரை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்
இதன் பின்னர் கடந்த 29 ஆம் தேதி சேலத்திற்கு அந்த பெண்ணை வரவழைத்து, அந்த நாள் முழுக்க ஏற்காடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும், பூங்கா என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
இறுதியில், தனியார் தாங்கும் விடுதியில் அறை எடுத்துவிட்டு அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மது கலந்து கடுத்து உள்ளார் நவீன் பாலிக்
பின்னர் தனது சகோதரர் சகோதரர் நவீஸ் மற்றும் ரஞ்சித் ஆகியோரையும் அழைத்துள்ளார்.
பின்னர் இந்த மூவரும் அந்த பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர்.வலி தாங்க முடியாமல் அழுத அந்த பெண்ணை விடாமல் கத்தி முனையில் பலாத்காரம் செய்து உள்ளனர்.
மேலும் அந்த பெண் வைத்திருந்த ஏடிஎம் கார்டு மூலம் முப்பது ஆயிரம் ரூபாயையும் எடுத்துவிட்டு அந்த பெண்ணை மிரட்டி உள்ளனர்
மேலும் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட அப்பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்ததை தெரிவித்துவிட்டு, நேற்று சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நைவின்மாலிக், நவீஸ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நம்பி வந்த பெண்ணிற்கு நிகழ்ந்த இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வாக அமைந்து உள்ளது.