கள்ளத் தொடர்வை கைவிட மறுத்த வாலிபர்... ஓடஓட விரட்டி கொன்ற வெளிநாட்டு கணவன்! கைது செய்ய பொதுமக்கள் சாலை மறியல்!

 
Published : May 05, 2018, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
கள்ளத் தொடர்வை கைவிட மறுத்த வாலிபர்... ஓடஓட விரட்டி கொன்ற வெளிநாட்டு கணவன்! கைது செய்ய பொதுமக்கள் சாலை மறியல்!

சுருக்கம்

husband killed his wifes boyfriend

கள்ளக்காதலை கைவிட மறுத்த வாலிபரை நான்குபேர் கொண்ட கூலிப்படை கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி  வெட்டிக்கொலை செய்யப்பட்ட இச்சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினரில் 3 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து செம அடி அடித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் உடையநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்த அன்பழகன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, தனது மனைவி விஜயாவுக்கும், அதே ஊரை சேர்ந்த மணிவேல், என்பவருக்கும்  கள்ளத்தொடர்பு இருந்தது நண்பர்கள் சொன்னதால் அதிர்ச்சியடைந்த அன்பழகன் விஜயாவை கண்டித்துள்ளார், அதேபோல மணிவேலையும் எச்சரித்துள்ளார். இதன்பின்னரும் விஜயாவுக்கும், மணிவேலுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு தொடர்ந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, கணவனுக்கு தெரியாமல் விஜயாவும், கள்ளக் காதலன் மனிவேலுவும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவன் அன்பழகன் மணிவேலை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நெய்வேலியைச் சேர்ந்த கூலிப்படை வைத்து நடத்தும் வீரமணியை தொடர்பு கொண்டு தனது மனைவியின் கள்ளக் காதலனை கொல்லனும், அதற்கு ரூ10 லட்சம் பணம் கொடுப்பதாக பேசி ஒரு தொகையை முன்பணமாக கொடுத்துள்ளார். கூலிப்படை தலைவன் வீரமணி தலைமையில் வந்த 4 பேர் நேற்று காலை 10 மணியளவில்  புதுஉச்சிமேடு கிராமம் செல்லும் சாலையில் தனியாக நடந்து சென்ற மணிவேலை பின்தொடர்ந்து சென்று அருவாளால் வீசியுள்ளனர். 

அப்போது, சற்றும் எதிர்பார்க்காத மணிவேல் கூலிப்படை வெட்டியதால் அலறித்துடித்து அங்கிருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் ஓடியுள்ளார். அங்கு வைத்து கூலிப்படை மணிவேலை வெட்டி சாய்த்தது. மணிவேலின் அலறல் சத்தம் கேட்ட கரும்பு வெட்டிக்கொண்டிருந்த  தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் கூலிப்படையினரை பிடிக்க முயன்றனர். அப்போது, கூலிப்படையினர் அவர்களையும் கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்கள். இதையடுத்து தொழிலாளர்கள் ஊர்க்காரர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். உடனே 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு கூலிப்படையை ஒட ஓட விரட்டி சென்றனர்.

நெய்வேலியை சேர்ந்த கதிர்வேல் என்பவரை முதலில் பிடித்தனர். அங்கிருந்த கடைக்குள் புகுந்த சுதாகர், பார்த்திபன், ஆகியோரையும் மடக்கினர். பின்னர்  3 பேரையும் ஒரே இடத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்துள்ளனர். தகவலறிந்து வந்த வரஞ்சரம் போலீசார் 3 பேரையும் மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குபதிந்து தலைமறைவான அன்பழகன், கூலிப்படை தலைவன் வீரமணி உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மணிவேலை படுகொலை செய்ததை கண்டித்து அந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் பஸ்நிறுத்தம் மற்றும் கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி செல்லும் சாலையில்  திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!