சென்னையில் அதிர்ச்சி! கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் புதுப்பெண் தற்கொலை! நடந்தது என்ன?

Published : Jun 08, 2025, 02:42 PM IST
Celebrity Marriage

சுருக்கம்

சென்னையில் புதுமணப்பெண் திருமணமாகி 10 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் வெளியே சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பெற்றோர் முன்னிலையில் திருமணம்

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (30). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆகும். பி.எஸ்சி. பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மம்முன்னை கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி (26) என்ற பி.காம். பட்டதாரி பெண்ணுக்கும் நிச்சியதார்த்தம் நடைபெற்று கடந்த மாதம் 28-ம் தேதி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நங்கநல்லூரில் திருமணம் நடைபெற்றது.

வெளியே சென்ற கணவர்

இருவரும் மறு வீடாக அவர்களது சொந்த ஊரான வந்தவாசி மற்றும் செஞ்சிக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பினர். நேற்று காலை ஷாலினிக்கு தலை வலிப்பதாக கூறியதை அடுத்து கடையில் மாத்திரை மற்றும் காலை உணவு வாங்கி கொடுத்து அதே பகுதியில் வசிக்கும் தனது சகோதரி விஜயா வீட்டுக்கு ஜெகன்நாதன் சென்றுள்ளார்.

தூக்கில் தொடங்கிய மனைவி

பின்னர் மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த கணவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஷாலினி தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷாலினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஷாலினிக்கு திருமணமாகி 10 நாட்களில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்