சென்னை சில்க்ஸ் தீ 3 மணி நேரத்தில் அணைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல் 

 
Published : May 31, 2017, 05:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
சென்னை சில்க்ஸ் தீ 3 மணி நேரத்தில் அணைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல் 

சுருக்கம்

Chennai silks fire accident will be finished in 3 hours by district collector anbuselvan inform

தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டதத்தில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் தளத்தில் தீ அணைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 6 தளங்களில் கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே தீ விபத்து மாவட்ட ஆட்சிர் அன்புச்செல்வன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். " சென்னை சில்க்ஸ் கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக மேலும் கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கட்டடத்தின் அமைப்பு காரணமாக தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புகைவெளியேறுவதற்கு கட்டடத்தில் வசசி இல்லாததே தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மூன்று மணி நேரத்தில் தீ அணைக்கப்படும். இதற்காக 50 லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!