ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை.! புற்றுநோய் போராட்டத்தை உணர்ச்சியுடன் பகிர்ந்த Chef மெனு ராணி செல்லம்

Published : Oct 25, 2025, 01:45 PM IST
menu rani

சுருக்கம்

பிரபல சமையல் நிபுணர் 'மெனு ராணி' செல்லம், தனது புற்றுநோய் போராட்டத்தையும் அதனால் ஏற்பட்ட சவால்களையும் பகிர்ந்துள்ளார். உணவு, தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையிலும், அவர் தனது நேர்மறை மனப்பான்மையால் மீண்டு வந்து பலருக்கு உத்வேகம் அளிக்கிறார்.

தன்னம்பிக்கை நாயகியின் போராட்ட வாழ்க்கை

மெனு ராணி செல்லம் சமையல் துறையில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டவர். பல சமயங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள், தொழில் சவால்கள், மற்றும் தனிப்பட்ட துன்பங்களை பற்றி அவர் வெளிப்படையாகப் பேசினயுள்ளார். ஒரு பெண்ணாக சமையல் துறையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக அவர் மேற்கொண்ட தியாகங்கள் அவரது உரைகளில் வெளிப்பட்டன.

தண்ணீர் அருந்த முடியாமல் போராட்டம்

சமையல்கலையில் 50 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் Chef மெனு ராணி செல்லம். தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் சமூக இணையதங்களில் இவர் வழங்கியிருக்கும் சமையல் குறிப்புகளும் நிகழ்ச்சிகளும் வெகு பிரபலம். கிட்டத்தட்ட 80 வயதுகளில் இருக்கும் இவர் புற்றுநோயில் இருந்து மீண்டு தன்னம்பிக்கை நாயகியாக வலம் வருகிறார். ஊருக்கே சமையல் சொல்லிக்கொடுத்த தண்ணால் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டதே என்பதுதான் நிதர்சனம்.

திடீரென மாறிய வாழ்க்கை

பிரபல சமையல் நிபுணர் மற்றும் 'மெனு ராணி' என்று அழைக்கப்படும் செல்லம், தனது உடல்நலப் பிரச்சினைகள் குறித்து தனியார் யூடியூப் சேனலில் வெளியான பிரத்யேக நேர்காணலில் உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துள்ளார். கொரோனா காலத்தில் தொடங்கிய அவரது சவால்கள், இரண்டு முறை அறுவை சிகிச்சை, ரேடியேஷன் சிகிச்சை என தொடர்ந்தாலும், நேர்மறையான அணுகுமுறையுடன் மீண்டு வந்துள்ளார். 

நேர்காணலில் செல்லம், தனது வாயில் ஏற்பட்ட சிறிய பரு போன்ற கட்டி படிப்படியாக வளர்ந்து, அமெரிக்காவில் அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்ததை விவரித்தார். "முதலில் பரு போல இருந்தது, பிறகு நெல்லிக்காய் அளவு, என் சமையல் மொழியில் சொன்னால் எலுமிச்சை அளவு," என்று கூறிய அவர், இரண்டாவது முறை கட்டி திரும்ப வந்தபோது கழுத்தை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். 

காபி குடிக்க கஷ்டப்பட்ட சமையல்கலை வல்லுணர்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, "ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை எனவும் பில்டர் காப்பி குடிக்க ஒரு பானை தேவைப்பட்டது," என்றும் உணர்ச்சியுடன் கூறினார். கொரோனா தொற்று காரணமாக வகுப்புகள், புத்தக வெளியீடுகள், சேனல்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுடன் தங்கியிருந்தார். முதல் அறுவை சிகிச்சையில் கீமோதெரபி அல்லது ரேடியேஷன் தேவையில்லாமல் தப்பித்தாலும், இரண்டாவது முறை 33 அமர்வுகள் ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் வாய் புண், பேச்சில் சிரமம், உணவு உட்கொள்ள இயலாமை போன்ற பிரச்சினைகளைச் சந்தித்தார்.

 தினமும் ஆயிரம் உணவுகளை சுவைக்கும் நான், ஒரு உணவுகூட சுவைக்க முடியாத நிலை எவ்வளவு சோகம் என்று கண்கலங்கினார். இருப்பினும், செல்லம் தனது நேர்மறை அணுகுமுறையை வலியுறுத்தினார். என் வலியைப் பார்க்கும்போது, மற்றவர்களின் சிரமங்களை நினைத்தால் நான் எதுவுமில்லை. 77 வயதில் இவ்வளவு செய்திருக்கிறேன், இன்னும் செய்வேன் என்று கூறினார். 

அவர் சமையல், ஓவியம், இசை, வெஜிடபிள் கார்விங் உள்ளிட்ட பல்துறை திறமைகளைப் பயன்படுத்தி வகுப்புகளைத் தொடர்கிறார். அறிவைப் பகிர்வது அழகு. என் மாணவர்கள் 1.8 லட்சம் பேர் என் குடும்பம் என்று பெருமையுடன் தெரிவித்தார். நேர்காணலில், வாழ்க்கையில் அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய செல்லம், ஸ்ட்ரெஸ் என்பது சிறு விஷயங்களுக்காக. வாழ்க்கை கடவுளின் ஆசீர்வாதம், அதை அனுபவியுங்கள், என்று கூறினார். செல்லத்தின் போராட்டக் கதை, பலருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் வகுப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!
வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!