கருகிய வாழைமரம்; விஷம் குடித்து விவசாயி தற்கொலை…

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 11:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
கருகிய வாழைமரம்; விஷம் குடித்து விவசாயி தற்கொலை…

சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டட்த்தில் வறட்சியினால் வாழை மரங்கள் கருகியதால், விஷம் குடித்து விவசாயி தற்கொலைச் செய்துகொண்டார்.

கொல்வேல் பகுதியைச் சேர்ந்தவர் இராசரத்தினம் (50). இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

விவசாயியான இவர் கொல்வேல், திருநந்திக்கரை உள்ளிட்ட இடங்களில் குத்தகைக்கு நிலம் எடுத்து சுமார் 2 ஆயிரம் வாழை நடவு செய்திருந்தார்.

இந்த நிலையில், வறட்சிக் காரணமாக வாழைகள் கருகின. இதனால் இவர் வாழை நடவுக்காக வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதனால், மனமுடைந்த இராசரத்தினம் சோகத்துடனே இருந்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று தன் வீட்டில் விஷம் குடித்த நிலையில் கிடந்துள்ளார் இராசரத்தினம்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். 

இதுகுறித்து திருவட்டாறு காவலாளர்கள் வழக்குப் பதிவ்ய் செய்து விசாரிணை நடத்தி வருகின்றனர்.

வறட்சியால் பயிர்கள் கருகினதைக் கண்டு மேலும், ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் போதை கும்பல் வெறியாட்டம்.. ஷாக் வீடியோ!