நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கியில் பயங்கர தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் மும்முரம்

First Published Dec 30, 2016, 10:36 AM IST
Highlights


சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் எஸ்பிஐ வங்கி அலுவலக்த்தின் மூன்றாவது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் , கம்ப்யூட்டர் உபகரணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

 சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் எஸ்பிஐ வங்கியின் மிகப்பெரிய அலுவலகம் உள்ளது. இங்கு வங்கி , கிரெடிட் கார்டு , இன்சுரன்ஸ் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள கட்டிடத்தின் 3 வது மாடியில் எஸ்பிஐ இன்சுரன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தளத்தில்  இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

காலையில் ஊழியர்கள் பணிக்கு வரும்போதே திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.  மூன்றாவது தளத்தில் பற்றிய தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இது பற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மூன்று தீயணைப்புத்துறை வாகனங்கள் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றன. மூன்றாவது தளம் என்பதால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கரும்புகையுடன் தீ எரிவதால் தீயணைப்புத்துறையினர் சுமார் 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஆனால் தீ இதுவரை கட்டுக்குள் வராமல் எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைத்தபின்னர்தான் முழுமையான சேதம் எதனால் தீ விபத்து என்பது தெரியவரும். 

முன்றாவது தளத்தில் பற்றிய தீ மற்ற குடியிருப்புகளுக்கு பர்வாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப்ட்டுள்ளது. அப்பகுதிய்யில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

click me!