TN Rain Alert : ஜனவரி 3 முதல் 5 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

By Raghupati R  |  First Published Jan 1, 2023, 3:07 PM IST

காற்றின் வேக மாறுபாடு காரணமாக 03ம் தேதி முதல் வருகிற 05ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது வானிலை மையம்.


வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 03ம் தேதி முதல் வருகிற 05ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இதையும் படிங்க..தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பெய்யவில்லை. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை என்று கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.

இதையும் படிங்க..BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!

click me!