ரயிலில் ரவுடித்தனம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது! கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

 
Published : Oct 10, 2017, 11:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
ரயிலில் ரவுடித்தனம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது! கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

சுருக்கம்

Central-State Government Responding to High Courts Order!

அரக்கோணம் அருகே நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு சென்னை, திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திற்கு, பச்சையப்பா கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வந்துள்ளனர். ரயில் நிலையத்தில் மாணவர்கள் கிண்டலாக பேசிக் கொண்டும், அருகில் இருப்பவர்களுக்கு தொந்தரவளிக்கும் வகையில் அவர்களின் நடத்தை இருந்தது.
பின்னர் ரயில் புறப்படும் நேரத்தில் அந்த மாணவர்கள் ரயிலுக்குள் ஏறினர். ரயில்  சில மாணவர்களின் கைகளில் கத்தி வைத்திருந்தனர். இதனைப் பார்த்த பயணிகள் பயத்துடனே இருந்தனர்.

ரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் இருந்தது மாணவர்களின் நடவடிக்கை இருந்தது. ரயில் நெமிலிச்சேரி ரயில் நிலையத்திற்கு சென்றபோது, மாணவர்கள் தங்கள் கையில் இருந்த கத்தியைக் கொண்டு நடைமேடையில் உரசிக் கொண்டு பயணித்தது அங்கிருப்பவர்களை அச்சப்பட வைத்தது.

ரயிலில் மாணவர்கள் கத்தி வைத்துக் கொண்டு ரயிலில் பயணித்தது குறித்து வீடியோ, இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திடம் சிலர் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் கூறும்போது, ரயிலில் கத்தியுடன் சென்றவர்கள் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பது உறுதியானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரியை விட்டு நீக்கம் செய்யப்படுவார்கள் என்று நேற்று கூறியிருந்தார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது உறுதியானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரயிலில் கத்தியுடன் அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் சென்னை, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!