எக்ஸ்பிரஸ் ரயில் விவகாரம்.. கோரிக்கை வைத்த தமிழக பாஜக - ஒரே நாளில் க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அமைச்சர்!

By Ansgar R  |  First Published Mar 15, 2024, 4:21 PM IST

BJP Leader Ashwatthaman : உளுந்தூர்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வது தொடர்பாக மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வந்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லவேண்டும் என்றும் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துவந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

இந்த நிலையில் அந்த கோரிக்கைகளை நிறைவற்றித்தரும்படி சென்னை வந்திருந்த மாண்புமிகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம், பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று காலை (14.03.2024) அன்று கோரிக்கை கொடுத்து வலியுறுத்தினார். அவரிடம் விஷயங்களை கேட்டறிந்த அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

Latest Videos

Tamilnadu Rain: வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்.. மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த இடங்களில் தெரியுமா?

அதன்படி இந்த சந்திப்பின்போது உடனிருந்த ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மத்திய அமைச்சர் இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இந்த சூழல் இன்று (15-03-2024) இரவே ரயில்வே வாரியம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி உளுந்தூர்பேட்டையில் நின்று செல்லும் என்ற அறிவிப்பையும் , திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இனி குத்தாலத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது ரயில்வே அமைச்சகம். இந்த ரயில்கள் நின்று செல்கிற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட ஆண்டுகள் கோரிக்கையான இவை பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் முயற்சியால் உடனடியாக நிறைவேற்றப் பட்டது உளுந்தூர்பேட்டை மற்றும் குத்தாலம் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி.. அதிரடி நடவடிக்கை எடுத்த கட்சி தலைமை!

click me!