நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லையா.? அலறி அடித்து விளக்கம் கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்

By Ajmal Khan  |  First Published Mar 15, 2024, 3:56 PM IST

வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். 
 


தாமரை சின்னத்தில் ஓபிஎஸ்

நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட ஓ.பன்னீர் செல்வத்தின் அணியை பாஜக நிர்பந்திப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியிடவில்லையெனவும், பாஜகவிற்கு முழு ஆதரவை தெரிவிப்பது என தகவல் கூறப்பட்டது. இந்தநிலையில் இந்த தகவலை மறுத்து ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Latest Videos

அதில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் முதற்கண் கேட்டுக் கொள்கிறேன்.

 இரட்டை இலை சின்னத்தை பஎற முயற்சி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் "இரட்டை இலை” சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதனை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து “இரட்டை சிலை” சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

வதந்தியை நம்ப வேண்டாம்

இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்தி மோடி அவர்களால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சிக்கு நமது ஆதரவினை தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

கோவையில் மோடியின் ROAD SHOW அனுமதி மறுத்த காவல்துறை..! சீறும் பாஜக
 

click me!