நாட்டிலேயே சிறந்த போக்குவரத்து சேவை.. MTCக்கு விருது வழங்கிய மத்திய அரசு.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்

Published : Nov 10, 2025, 10:32 AM IST
Mk Stalin

சுருக்கம்

Mk Stalin: மத்திய அரசின் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது பெற்ற சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் இந்திய நகர்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார். இணை அமைச்சர் டோகன் சாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு நகர்ப்புற போக்குவரத்து திறன் வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விருதைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “A city’s living standards are reflected in the reliability and quality of its public transport.

இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் மாண்புமிகு அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும் பாராட்டுகள்!

#LastMileConnectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!