கல்லூரி மாணவர்களுக்கு வருகிறது கடிவாளம்....தமிழக கல்வித்துறை அதிரடி!

By vinoth kumarFirst Published Aug 19, 2018, 1:16 PM IST
Highlights

கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செல்போன் பயன்படுத்த தமிழக கல்வித்துறை தடை விதித்துள்ளது. கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு நிபந்தனைகள் இருந்து வருகிறது. சில கல்லூரிகளில் இவை கடுமையாக பின்பற்றப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கல்வி இயக்குனர் அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு உயர்கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். செல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. தற்போது கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சாருமதி இதற்கான உத்தரவை அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு அனைத்து கல்லூரி நிறுவனத்திற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!