பூவிருந்தவல்லி சிறையில் சிக்கிய குட்டி செல்போன், 3 பேட்டரி! ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் புதிய திருப்பம்!

By SG Balan  |  First Published Jul 11, 2024, 3:42 PM IST

பூவிருந்தவல்லி சிறையில் 1வது ப்ளாக்கில் படிக்கட்டுக்குக் கீழ் கைவிரல் அளவே இருக்கும் குட்டி செல்போன், சிம் கார்டு மற்றும் அதற்குரிய 3 பேட்டரிகள் கிடைத்தன.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்ற ஜூன் 5ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகிலேயே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக அறிக்கை கேட்டு, தமிழக தலைமைச் செயலாளருக்கும், தமிழக டிஜிபிக்கும் தேசிய பழங்குடியினர் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் வைக்கப்பட்டுள்ள சிறையில் சிறிய செல்போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைவிரல் அளவே உள்ள குட்டி செல்போனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். பூவிருந்தவல்லியில் உள்ள தனிக் கிளைச் சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் லீ பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற திடீர் ஆய்வின்போது இந்த செல்போன் சிக்கியது.

ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் ரிங் வரை... மொத்த வித்தையையும் இறக்கிய சாம்சங்... கேஜெட் பிரியர்கள் குதூகலம்!

சிறையில் 1வது ப்ளாக்கில் படிக்கட்டுக்குக் கீழ் கைவிரல் அளவே இருக்கும் குட்டி செல்போன், சிம் கார்டு மற்றும் அதற்குரிய 3 பேட்டரிகள் கிடைத்தன. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் உள்ள ஜேம்ஸ் லீ பிரிட்டோ பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த செல்போன் தொடர்பான கஞ்சா வழக்கில் கைதான மாறன் என்பவரிடமும் கொள்ளை வழக்கில் கைதான பாஸ்கர் என்பவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் பூவிருந்தவல்லி சிறையில்தான் உள்ளனர். அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், பூவிருந்தவல்லி சிறையில் இருந்து குட்டி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

125 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய டைனோசர் புதைபடிவ எச்சங்கள் கண்டுபிடிப்பு!

click me!