அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 01:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

சுருக்கம்

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. 45–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 45–ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள் கிழமை நடந்தது. இதையொட்டி பெத்ததாளப்பள்ளியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்கள்.

 

இதே போல கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 45–ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் கட்சி கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர்.

 

இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சோக்காடிராஜன், நகர செயலாளர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆவின் தலைவர் தென்னரசு. முன்னாள் எம்.பி.பெருமாள், தொகுதி செயலாளர் காத்தவராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ். பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இரவிச்சந்திரன், விவசாய அணி செயலாளர் வெங்கட்ராமன், ஒன்றியக்குழு தலைவர் ஜமுனா கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் வாசுதேவன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

மிருணாள் தாகூருடன் டும்..டும்..டும்... தேதி குறித்த குடும்பம்... தனுஷின் புதுப்புது அர்த்தங்கள்..!
வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!