
சில நாட்களுக்கு முன்பு பான், குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகியது.
இதனிடையே தமிழக டி.ஜி.பி.யாக பணியாற்றிய டி.கே.ராஜேந்திரனின் பதவி காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து மீண்டும் 2 ஆண்டுகள் பணி நீடிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் டிஜிபியாக இருக்கும் டிகே ராஜேந்திரன் பணம் பெற்றுக் கொண்டு குட்கா விற்பனையை அனுமதித்ததாக குற்றசாட்டு எழுதுள்ளது.
எனவே அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி நீடிப்பு அரசாணையை ரத்து செய்து விட்டு இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அபிடவிட்டில் கும்பகோணம் மகாமகம் விபத்து, தாமிரபரணி ஆற்றில் 17 பேர் உயிரிழந்த விபத்து, அதிமுக ஆட்சியில் வெள்ள நிவாரணத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உட்பட அனைத்து நேரத்திலும் அந்தந்த இடங்களில் அதிகாரியாக தற்போது டிஜிபியாக உள்ள டிகே ராஜேந்திரன் இருந்துள்ளார் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.