
சென்னை அருகே பூட்டியிருந்த வீட்டை திறந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வேளச்சேரி, ஒரண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலன். இவர் சென்னை பல்கலை கழகத்தில் துணை பதிவாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
பாலன் வீட்டை விட்டு வெளியே செல்வது என்றால் வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை ஜன்னல் அருகே மாட்டி வைத்துவிட்டு செல்வது வழக்கம்.
அதேபோல், இன்றும் பிற்பகல் வீட்டை பூட்டி விட்டு, சாவியை ஜன்னல் அருகே மாட்டி வைத்து விட்டு, பொருட்கள் வாங்க புரசைவாக்கத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர், மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திற்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு அவரது மனைவி உமா தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.