தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் விவகாரம் தலைமறைவாக இருந்த குற்றவாளி குமார் கோயமுத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சிறுவர்களுக்கு கடையில் தின்பண்டம் தரமாட்டோம் என்றும் ஊர் கட்டுப்பாடு உள்ளது என்று சாதிய தீண்டாமையை விதைத்த வீடியோ கடந்த 16 ம் தேதி முதல் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் ஊர் நாட்டமை மகேஸ்வரன், மற்றும் ராமசந்திரமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் சுதா (45), குமார்(40), முருகன் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படையினரின் தீவிரமான தேடுதலில் கோயமுத்தூரில் பதுங்கி இருந்த குமாரை தற்போது காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர்கள் மீதான சாதி தீண்டாமை.. குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை.. தென்மண்டல ஐ.ஜி உத்தரவு..
பின்னணி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமாம். இங்கு பட்டியலின பள்ளி குழந்தைகளுக்கு, ஊர்க்கட்டுப்பாடு இருப்பதாகக் கூறி கடையில் தின்பண்டம் கொடுக்க மறுத்து விட்டார் கடைக்காரர். இது வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இது அனைத்து செய்தித்தாள்கள், இணையதளங்களில் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி இருந்தனர்.
பாஞ்சாகுளம் தீண்டாமை அவலம்.. பாய்ந்த நடவடிக்கை.. புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்..
இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த மேலும் மூவரை தேடி வந்தனர். இந்த நிலையில்தான் இன்று கோயமுத்தூரில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.