நெல்லையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணாலை சொல்கிறார்.
நெல்லையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடந்த சாதி வன்கொடுமை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் ஜாதி வன்கொடுமை அதிகரித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
அண்மையில், நெல்லையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணாலை கூறியுள்ளார். இத்தகைய சம்பவங்களைத் தடுத்து நிறத்தும் கடமை தமிழக அரசுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதைப்பற்றி அண்ணாமலை அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், "திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது, ஜாதியைக் கேட்டு ஒரு கும்பல் கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தியதோடு, இருவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமையில் ஈடுபட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும்: ஈபிஎஸ் அட்வைஸ்
திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது, ஜாதியைக் கேட்டு ஒரு கும்பல் கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தியதோடு, இருவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமையில் ஈடுபட்ட செய்தி மிகுந்த… pic.twitter.com/qvrg2oIHYE
— K.Annamalai (@annamalai_k)"இந்த மனிதத் தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர்களை, பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். "ஜாதிய ரீதியிலான குற்றங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்துவதும், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் அரசின் கடமை." எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.
"மாதம் ஒரு குற்றம் நடந்த பிறகு, கோபாலபுர அரசியல் வாரிசுகளில் ஒருவரை அனுப்பி வசனம் பேசி சமாளிப்பது, நிரந்தரத் தீர்வு தராது என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்" எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
சாம்சங் மொபைல் வாங்கப் போறீங்களா? இந்த தீபாவளி ஆஃபரைப் பாத்துட்டு செலக்ட் பண்ணுங்க!