அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை வீட்டில் சோதனை நிறைவு… கைப்பற்றப்பட்ட ரொக்கம் வங்கியில் ஒப்படைப்பு!!

By Narendran S  |  First Published Aug 4, 2022, 11:48 PM IST

அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத ரொக்கம் மதுரை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. 


அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத ரொக்கம் மதுரை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என். அன்புசெழியன். இவர் திரைப்படங்களை தயாரிப்பது, ரிலீசாகும் படத்தை வாங்கி விநியோகிப்பது மற்றும் திரைப்பட பைனான்சியராக இருந்து வருகிறார். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை காமராஜர் சாலையில் உள்ள வீட்டில் கடந்த 2 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை சோதனை செய்து வந்தது.

இதையும் படிங்க: நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதிக்கு மனு... இது கீழ்தரமானசெயல் என ஓபிஎஸ் தரப்பை கண்டித்த நீதிபதி.

Tap to resize

Latest Videos

இந்த சோதனை இன்று நிறைவடைந்தது. அன்புச்செழியன் வீட்டில் இருந்து சூட்கேஸ் மற்றும் பேக்குகளில் முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அன்புச் செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் மதுரை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. அன்புச்செழியனுக்கு சொந்தமான மேலும் சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றது.

இதையும் படிங்க: 5ஜி வழக்கில் பாஜக மீது குற்றம் சொன்ன திமுகவை திருப்பி அடித்த சீமான்.. டுவிட்டரில் பங்கம் செய்த திமுக MP.

மேலும் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்கு பின்னரே அன்புசெழியன் எங்கு இருக்கிறார்? ஏதேனும் முறைகேடு செய்துள்ளாரா? என்ற தகவல் வெளியாகும். பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில்  கடந்த 2020ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!