இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500... தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

Published : Aug 04, 2022, 11:06 PM IST
இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500... தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

சுருக்கம்

இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்கு பெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறித் தேர்வு நடத்தப்படும்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் தேர்வின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வு செய்து மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். 1,500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிங்க: முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2,207லிருந்து 3,237 ஆக அதிகரிப்பு… அறிவித்தது டி.ஆர்.பி!!

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். அரசுத் தேர்வுத்துறையால் தேசிய திறனறித் தேர்வை போன்றே நடத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live Updates 07 December 2025 : கோவா தீ விபத்து முதல் தேர்தல் ஆணையம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்
தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!