எங்களையா அடிச்சீங்க…. இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது கேஸ் போட்டாச்சு….!

Published : Sep 26, 2021, 08:48 AM IST
எங்களையா அடிச்சீங்க…. இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது கேஸ் போட்டாச்சு….!

சுருக்கம்

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாகை: தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரும், மீனவர்களும் தாக்குதல் நடத்துவது மீண்டும் தொடர்கதையாகி வருகிறது. நாகை மாவட்டம வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கி உள்ளனர்.

மேலும், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை உள்ளிட்ட பொருட்களையும் அவர்கள் திருடிச் சென்றனர். தாக்குதலில் சின்னத்தம்பி, சிவா, சிவகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

தாக்குதலை கண்டித்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் போராட்டமும் நடத்தி உள்ளனர். தாக்குதல் நிகழாத வண்ணம் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

இந் நிலையில், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கொள்ளையடித்துச் சென்ற இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தாக்குதலை கண்டித்து ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் போராட்டம் 2வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!