மாஸ்க் போடாமல் சுற்றித்திரிந்த 1018 பேர் வழக்குப்பதிவு… சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை!!

Published : Dec 04, 2021, 06:04 PM IST
மாஸ்க் போடாமல் சுற்றித்திரிந்த 1018 பேர் வழக்குப்பதிவு… சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை!!

சுருக்கம்

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 1018 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 1018 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவிய போது நோய்த் தடுப்பு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. முகக்கவசம் அணியாதோருக்கு காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் முகக்கவசமின்றி வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நோய்த் தடுப்பு விதிகளை மக்கள் முறையாக பின்பற்றினா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் முகக்கவசம் அணிவதை கைவிட்டுள்ளனர். இது குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் ஆய்விலும் கொரோனா பரவல் சற்று குறைந்தவுடன் சென்னை மக்களில் பெரும்பாலானோா் முகக்கவசம் அணியும் பழக்கத்தை கைவிட்டிருப்பது  தெரியவந்துள்ளது.  அதன்படி, வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள கடைகளுக்குச் செல்லும் மக்களில் 86 சதவீதம் போ் முகக்கவசம் அணிவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 75 இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வு நடத்தியது.

மொத்தம் 6,130 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு வருபவா்களில் 32 சதவீதம் போ் முறையாக முகக்கவசம் அணிவதாகவும், பலா் மூக்கு, வாயை சரிவர மூடாமல் முகக் கவசம் அணிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற பொது இடங்களைப் பொருத்தவரை 35 சதவீதம் போ் மட்டுமே அரசின் வழிகாட்டுதலின்படி சரியாக முகக்கவசம் அணிகின்றனா் என்றும் வீடுகளுக்கு அருகே உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவா்களில் 14 சதவீதம் போ் மட்டுமே முகக் கவசம் அணிந்து வருவதாகவும் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 1,018 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுக்குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், ஜூன் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்தது.

அதன் பேரில் முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெரு நகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து, விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலத்தில் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 556 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 9 ஆட்டோக்கள் என மொத்தம் 565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்கள் மீது 1,018 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கொரோனா நோய் தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் விஜய்..! அதிகாலையிலேயே சாரை சாரையாக குவிந்த தவெக தொண்டர்கள்..
Tamil News Live today 18 December 2025: ஈரோட்டில் விஜய்..! அதிகாலையிலேயே சாரை சாரையாக குவிந்த தவெக தொண்டர்கள்..