நல்ல செய்தி..! ஒமைக்ரான் இல்லை..! இல்லை..! - அமைச்சர் பதில்

By Thanalakshmi VFirst Published Dec 4, 2021, 5:20 PM IST
Highlights

ஹை ரிஸ்க் நாட்டிலிருந்து வந்த 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
 

ஹை ரிஸ்க் நாட்டிலிருந்து வந்த 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் கொரோனா வைரஸ், மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கபடும் நபர்களுக்கு நோயின் அறிகுறி தீவிரமாக இருக்கும் எனவும் தடுப்பூசி இரு தவணை செலுத்திக்கொண்டாலும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.  

மேலும் தென் ஆப்பிரிக்காவை அடுத்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அண்டை நாடுகளான, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரிட்டன்,ஜிம்பாம்வே, மோரிஷஸ், பிரேசுஇல், ஜெர்மனி, சீனா ,சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜரோப்பியா நாடுகள் உள்ளிட்ட 34 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது புது வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்றினால் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகவில் 2 பேருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேருக்கும் இதுவரை ஒமைக்ரான் வகை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய வகை கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய சர்வேத விமான நிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவருக்கும், லண்டனிலிருந்து சென்னை வந்த ஒரு சிறுமி உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இவரது சளி மாதிரிகள், ஒமைக்ரான் வகை தொற்றை கண்டறிய மரபியல் பகுபாய்வு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இன்று மேலும் இங்கிலாந்து இருந்து சென்னை வந்த ஒருவர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்த நாடுகளிலிருந்து வந்தவர்களில் இதுவரை 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மரபியல் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.
 

இந்நிலையில் தற்போது, வெளிநாடுகளிலிருந்து தொற்றுடன் வந்த 3 பேருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு இல்லை என்று சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான இன்னும் ஒருவரின் முடிவு தெரியவேண்டியுள்ளது. குறிப்பாக, அதன் முடிவுகள் 4 முதல் 5 நாட்களில் தெரியவரும் என்று கூறினார்.    

click me!