VGP பல கோடி அபேஸ் பண்ணிட்டாங்க... கேட்டால் ரவுடிகளை விட்டு கொலை மிரட்டல்! நியூசிலாந்து தம்பதி பகீர் புகார்

By sathish k  |  First Published Sep 16, 2018, 5:32 PM IST

சென்னையில் உள்ள பிரபல விளையாட்டு மையமான விஜிபியில் பிரம்மாண்டமான வகையில் மீன் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜிபி சகோதரர்களின் ஒருவரான ரவிதாஸின் கண்காணிப்பில் அருங்காட்சியக பணி நடந்து வருகிறது. 


சென்னையில் உள்ள பிரபல விளையாட்டு மையமான விஜிபியில் பிரம்மாண்டமான வகையில் மீன் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜிபி சகோதரர்களின் ஒருவரான ரவிதாஸின் கண்காணிப்பில் அருங்காட்சியக பணி நடந்து வருகிறது. 

இந்த அருங்காட்சியக பணிக்கு நியூசிலாந்தை நாட்டைச் சேர்ந்த மரைன் எஸ்கேப் நிறுவன மேலாண் இயக்குநர் அயன் மெல்சாப், ஹிலான் அர்னால்டு தம்பதியினர் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பணியை செய்து வந்தனர். இவர்கள், 2 ஆண்டுகளாக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபிக்கு சொந்தமான காட்டேஜில் இந்த தம்பதியினர் தங்கி இருந்தனர்.

Latest Videos

undefined

இந்த நிலையில், மீன் அருங்காட்சியகப் பணிக்காக அமெரிக்க டாலர் 2 மில்லியன் கொடுக்குமாறு விஜிபி நிறுவனத்துக்கு நியூசிலாந்து தம்பதியினர் மெயில் அனுப்பியிருந்தனர். மேலும் அதுவரை அருங்காட்சியகப் பணிகள் எதுவும் நடக்கவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விஜிபி நிறுவனம் காட்டேஜில் தங்கியிருந்த நியூசிலாந்து தம்பதியினரை வெளியேற்றியுள்ளது. இதையடுத்து தங்கள் உடைமைகளுடன் வீதிக்கு வந்த நியூசிலாந்து தம்பதி, நீலாங்கரை போலீசில் புகார் அளித்தனர். தங்களிடம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7.21 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களை நாட்டை விட்டு உதவி ஆய்வாளர் ஒருவரும், சில ரவுடிகளைக் கொண்டு விஜிபி ரவிதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டுவதாகவும் அந்த புகாரில் அவர்கள் கூறியுள்ளனர். விஜிபி காட்டேஜில் இருந்து வெளியேற்றப்பட்ட நியூசிலாந்து தம்பதி, போக இடம் இல்லாததால், காட்டேஜ் வாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 

இந்த புகார் குறித்து விஜிபி ரவிதாஸ் கூறும்போது, நியூசிலாந்தை நாட்டைச் சேர்ந்த அயன் மெல்சாப் ஒரு மோசடி பேர்வழி என்று குற்றம் சாட்டினார். அருங்காட்சியகப் பணிகளை முடிக்காமல் பலகோடி ரூபாய்கள் மோசடி செய்து விட்டதாகவும், அலுவலக ஃபைல்கள், வரைபடத்தை அவர்கள் எடுத்து சென்று விட்டதாகவும் விஜிபி ரவிதாஸ் புகார் கூறியுள்ளார்.

அயன் மெல்சாப் பல நாடுகளில் மோசடி செய்து விட்டு இங்கும் கைவரிசை காட்டியதால் அருங்காட்சியக பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் விளக்கம் கூறினார். விஜிபி காட்டேஜில் இருந்து களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் வாசலில் அமர்ந்து தகராறு செய்வதாகவும், அயன் மெல்சாப் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

click me!