
பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பீட்டா அமைப்பின் இணைய தளத்தில் ஆபாச படம் நிறைந்து உள்ளது. எனவே அவற்றை முடக்க வேண்டும். கடந்த 2012ம் ஆண்டு முதல் வருமான வரித்துறை கணக்கை தாக்கல் செய்யவில்லை.
எனவே பீட்டா அமைப்பிறகு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர அதிகாரம் இல்லை. எனவே பீட்டா அமைப்பினையும், அதன் இணைய தளத்தையும் தடை செய்ய வேண்டும் என சென்னை வழக்கறிஞர் பால சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இன்று தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் முறையிட்டார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசரம் தற்போது இல்லை. எனவே வழக்கு பட்டியலிடப்பட்டு வந்தபின் விசாரிக்கபடும் என கூறி வழக்கறிஞர் முறையீட்டை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நிராகரித்தார்.
ஏற்கனவே சென்னை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் எனவரும் பீட்டா அமைப்பு இந்திய இறையாண்மைக்கும், கலாச்சாரத்திற்கும் எதிராக செயல்படுவதால், பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.