போராட்டக்காரர்களுக்கு நேரம் கொடுக்கவில்லை என்பது தவறு - பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பேட்டி

 
Published : Jan 27, 2017, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
போராட்டக்காரர்களுக்கு நேரம் கொடுக்கவில்லை என்பது தவறு - பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பேட்டி

சுருக்கம்

ஜனவரி 23 அன்று மெரினாவில் போராட்டக்காரர்களை கலைவதற்கு நேரம் கேட்டும் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது என்று துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். 

இது குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பியதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

போராட்டக்காரர்கள் காலையில் சொன்ன போது 4 மணி நேரம் டைம் கொடுங்க டைம் கேட்டார்கள், ஆனால் அவர்களுக்கு நேரம் கொடுக்காமல் , அதிகாலையில் விடிவதற்கு முன்னர் விரட்டியதாக குற்றச்சாட்டு உள்ளதே?

இதில் ரெண்டு விஷயம் விடிந்ததுக்கு பிறகுதான் பேசுகிறோம். அதில் ஒருத்தர் 4 மணி நேரம் கேட்கிறார். , ஒருவர் 2 மணி நேரம் கேட்கிறார். ஆளாளுக்கு பேட்டி அளிக்கின்றனர். பலகோரிக்கைகளை வைத்தனர். 

அன்று காலை நடந்த நிகழ்வாக இதை பார்க்கக்கூடாது. அவசர சட்டம் நிறைவேற்றப்பட்ட  21 ஆம் தேதி முதல் போராட்டக்காரர்களிடம்  அவசர சட்டம் குறித்து விளக்கம் அளித்து கலைந்து செல்ல கூறினோம். 

ஆனால் ஆளாளுக்கு விளக்கமும் பேட்டியும் தனித்தனியே கொடுத்தனர். கலைந்து செல்லவும் மறுத்து விட்டனர். ஆகையால் அன்று நெருக்கடி கொடுத்தது போல் சொல்வது சரியல்ல இவ்வாறு அவர் தனியார் செய்தி சானலுக்கு பேட்டி அளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?