பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பரபரப்பான சிசிடிவி காட்சி

Published : Sep 27, 2022, 05:40 PM IST
பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பரபரப்பான சிசிடிவி காட்சி

சுருக்கம்

திருமங்கலம், விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், நான்கு மாணவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

திருமங்கலம், விருதுநகர் நான்கு வழிச்சாலை அருகே தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது., தனியார் பள்ளி பேருந்து இன்று காலை வழக்கம் போல மாணவர்களை ஏற்றிக்கொண்டு கள்ளிக்குடியில் இருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பள்ளிப் பேருந்து மையிட்டான்பட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனசேகரன்(52) என்பவர் விருதுநகரில் இருந்து கள்ளிக்குடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். 

சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈஷாவுக்கு விலக்கு.. மத்திய அரசு சொன்ன புது தகவல் !

அப்போது திடீரென கார் தனசேகரனின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் ஏறி எதிர் திசைக்கு சென்றது. அப்போது எதிரே வந்த பள்ளிப் பேருந்து மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த தனசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் அதிபன், சக்திவேல், பார்த்திபன் உள்பட நான்கு மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

சென்னை அண்ணாநகரில் குமரி ஆனந்தனுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் ..! ஏன் தெரியுமா..?

தகவல் அறிந்த கள்ளிக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி காரில் சிக்கியிருந்த தனசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!