பத்திரப்பதிவிற்கு மீண்டும் தடை ....! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி ...! மக்களுக்கு பேரிடி.....!

 
Published : Jan 30, 2017, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
பத்திரப்பதிவிற்கு  மீண்டும்   தடை ....!  உயர்நீதிமன்றம்  போட்ட அதிரடி ...! மக்களுக்கு  பேரிடி.....!

சுருக்கம்

விவசாயநிலங்களை   வீட்டு  மனைகளாக   போட்டு   விற்கப்படுவதற்கு  எதிராக  சென்னை  உயர்நீதிமன்றத்தில், பொதுநல  மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த  வழக்கு  தற்போது,  சென்னை உயர்நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது .இதன் விளைவாக , விவசாய நிலங்களை , மனைகளாக  போட்டு   விற்கப் படுவதற்கு    தொடர்ந்து தடை  நீடித்து வந்தது .

வழக்கு  விசாரணை :

இந்நிலையில் இந்த  வழக்கு இன்று  சென்னை  உயர்நீதி மன்றத்தில்  விசாரணைக்கு  வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள்  பத்திரபதிவுக்கு தொடர்ந்து  தடை விதித்து   உள்ளனர்..  மேலும்,  இது குறித்த  விசாரணையை   வரும் பிப்ரவர் 27 ஆம்  தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது  உயர்நீதிமன்றம் .

தமிழக  அரசுக்கு  கால அவகாசம் :

பத்திர ப்பதிவு  தடையால் ,  மக்கள்  பாதிப்படைவதை   அறிந்து தமிழக  அரசுதான்  விரைந்து  முடிவெடுக்க  வேண்டும் என கூறி,  மேலும்  3  வார  கால  அவகாசத்தை  வழங்கி  வழக்கை ஒத்திவைத்துள்ளது  சென்னை  உயர்நீதிமன்றம்

மேலும், விவசாய நிலங்களை   அரசுதான்  விரைவில் வகைபடுத்தி, அதற்கான  இறுதிக்கட்ட முடிவை  எட்ட  வேண்டும்  என   விளக்கம்  அளித்துள்ளது  உயர்நீதிமன்றம் .

இதன் மூலம் ,  விவசாய நிலங்களை  வீட்டு மனைகளாக போட்டு   விற்பதற்கு தொடர்ந்து  தடை  நீடிக்கிறது  என்பது  குறிபிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

காங்கிரஸ்க்கு கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்..? போனிலேயே நடந்து முடிந்த டீல்.. கலக்கத்தில் திமுக
அதிமுக விருப்ப மனுவுக்கு ரூ 18 லட்சம் பணம் கட்டிய நபர்..! 120 தொகுதிகளில் எடப்பாடி போட்டியிட மனு