
மெரீனாவில் பதற்றம்....!! கொட்டியது கச்சா எண்ணெய்...!! செத்து மிதக்கிறது உயிரினம் ....!!
இரண்டு கப்பல்கள் மோதிய விபத்தில், கச்சா எண்ணெய் கசிந்ததால் மீன்கள், ஆமைகள் செத்து மிதக்கின்றன.
எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கப்பலின் டீசல் எண்ணெய் கடலில் கசிந்துள்ளது. இந்த விபத்தால், குறைந்த பட்சம் ஒரு டன் டீசல் கடலில் கலந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பிரித்தெடுக்கும் பணி தீவிரம் :
கச்சா எண்ணெய் கசிந்து, கடல் நீரில் கலந்துள்ளதால், தற்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தற்போது மாசுப்பட்ட கடல்நீரை சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
எப்படி நடந்தது இந்த விபத்து ?
கடந்த 27ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 கடல் மைல் தூரத்தில் வந்த 2 கப்பல்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த நிகழ்வு நடைப்பெற்றுள்ளது. பின்னர், தகவல் அறிந்து வந்த சென்னை கடலோர பாதுகாப்பு படையினர், இரண்டு கப்பல்களையும் மீட்டனர்.
எங்கெல்லாம் கச்சா எண்ணெய் பரவியது ?
கடல் முழுவதும், எண்ணெய் கலந்து எண்ணூர், திருவொற்றியூர், எர்ணாவூர் கடற்கரை முழுவதும் டீசல் படிந்து காட்சி அளிக்கிறது. இதன் விளைவாக தற்போது பல உயிரினம் செத்து மிதந்து வருகிறது.
ஆமைகள் மற்றும் மீன்கள் :
இந்த விபத்தால், தற்போது வரை 4 கடல் ஆமைகள், ஏராளமான மீன்கள் செத்து கரையொதுங்கியுள்ளன என்பது குறிபிடத்தக்கது.மேலும் , இந்த டீசல் சுமார், 200 மீட்டர் தூரத்துக்கு கடற்கரையோர கற்களில் டீசல் படிந்து உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இதன் விளைவாக மேலும், எந்தஅளவுக்கு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.