பட்ஜெட்டை குறை சொல்ல முடியாது ஆனாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட் என காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 22ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் பட்ஜெட்டிற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், பட்ஜெட்டை குறை சொல்ல முடியாது ஆனாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட் என காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
undefined
இதுகுறித்து, காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறுகையில், “தமிழ்நாடு 2004-25 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை குறை சொல்ல முடியாது, இருந்தாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட் என்று கூறலாம். பட்ஜெட் திட்ட ஒதுக்கீட்டில் மதுரை, கோவை, சேலத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது போல் தெரிகிறது.
அதிமுகவை இப்பகுதியில் அழித்து விட்டு திமுக ஜெயிக்க எடுக்கப்பட்ட நோக்கமாகத் தெரிகிறது. 2024 தேர்தலை எதிர்ப்பார்த்து பொதுவாக பல இலவசங்களை எதிர்ப்பார்த்தார்கள். பழைய திட்டங்களை தொடர நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப பூங்காங்களை ஜவுளி பூங்கா போன்ற சிறுசிறு திட்டங்களுடன் உலக முதலீட்டாளர்கள் மூலம் மாவட்டந்தோறும் பல கோடியில் தொழிற்சாலைகள் வரும் என்று மக்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
தமிழ்நாடு பட்ஜெட் 2024: திருக்குறள் கூறி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
மத்திய அரசு வஞ்சிக்கிறது. ஒன்றிய அரசு ஒத்து வரவில்லை என்று கூறாமல் சாதுர்யமாக பட்ஜெட்டை நிதி அமைச்சர் எடுத்து வைத்தார். சென்னையை உலக்தரம் வாய்ந்த தொழில் நகரமாக தரம் உயர்ந்த சென்னையில் உள்ள மாநில அரசு இலாக்கள் சிறிது சிறிதாக திருச்சிக்கு மாற்றப்படும். திருச்சி தமிழ்நாட்டின் இணை தலைநகரமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு பட்ஜெட் உரையில் இல்லை முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பார் என்று எதிர்ப்பு தொடருகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.