தமிழக பட்ஜெட்டை 2 மணி நேரம் 7 நிமிடம் வாசித்து நிறைவு செய்த தங்கம் தென்னரசு.!புதிய அறிவிப்புகள் என்ன தெரியுமா?

By Ajmal Khan  |  First Published Feb 19, 2024, 1:25 PM IST

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அரசே ஏற்கும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரிசி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக பட்ஜெட் - புதிய அறிவிப்பு என்ன.?

தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024- 25ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில், பல்வேறு புதிய அறிவிப்புகளும், புதிய திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தனது உரையை தொடங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு மதியம் 12மணி 7 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். தனது உரையை தொடர்ந்து 2 மணி நேரம் 7 நிமிடங்கள் வாசித்துள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

  •  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச Wifi வசதிகள்
  •  தமிழகத்திற்கு 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும்
  • பள்ளிகளை புதுப்பித்தல், மேம்படுத்துதல், கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

  • ராமநாதபுரத்தில் கடல் சார் விளையாட்டு மையம் அமைக்கப்படும்
  • பூவிருந்தவல்லி- கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் 2025 ஆண்டு டிசம்பரில் தொடங்கிவைப்பார்
  • ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2500 கோடி கல்வி கடன் வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் 
  • கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா 20 லட்சம் சதுர அடியில் 1100 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்
  •  42 கிமீ நீளமுள்ள அடையாறு ஆறு ரூ.1,500 கோடி செலவில் சீரமைக்கப்படும்

  • மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அரசே ஏற்கும்
  • சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரிசி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த திட்டத்திற்கு 370 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் இலவச Wifi.. 500 புதிய மின் பேருந்துகள்- தமிழக பட்ஜெட்டில் வெளியான புதிய அறிவிப்பு

click me!