வட சென்னை வளர்ச்சிக்கு 1000 கோடி.! உயர்கல்வி படிக்கும் 3ஆம் பாலினத்தவருக்கு முழு செலவையும் அரசே ஏற்கும்

By Ajmal Khan  |  First Published Feb 19, 2024, 11:25 AM IST

தமிழக நிதி நிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஊரகப்பகுதியில்  அரசு உதவி பெறும் பகுதிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...

  • வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் புதிய குடியிருப்புகள் திறன்மிகு பள்ளிகள் தொழிற்பயிற்சி மையங்கள் மருத்துவமனைகள் ஏரிகள் சீரமைப்புகள் இடம்பெறுமன அறிவிப்பு
  • தமிழ்நாட்டின் முதன்மை நதிகள் புனரமைப்புக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.  காவிரி-ஈரோடு. திருச்சி-நொய்யல், கோயம்புத்தூர். திருப்பூர், வைகை -மதுரை தாமிரபரணி திருநெல்வேலி
  • புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நாமக்கல்லில் 358 கோடி மதிப்பீட்டிலும், திண்டுக்கல்லில் 565 கோடி மதிப்பீட்டிலும் பெரம்பலூரில் 366 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

  • சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரிசி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த திட்டத்திற்கு 370 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஊரகப்பகுதியில்  அரசு உதவி பெறும் பகுதிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்

Latest Videos

undefined

  • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு கோடிய 15 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாகவும் ,இதற்காக 1370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்
  • மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அரசே ஏற்கும்
  • பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் தொடங்கப்படும்
  • தோழி விடுதிகள் பணிபுரி மகளே காண புதிய விடுதிகள் அமைக்கப்படும் இதற்காக 26 குடியுரிமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

click me!