2030க்குள் குடிசை இல்லா தமிழகம்... ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்.! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Feb 19, 2024, 10:32 AM IST

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2030க்குள் குடிசை இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். 6ஆண்டுகளில் 8 லட்சம்ன்கிரீட் வீடுகள் அமைக்கப்படும் 2024-25 இல் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 3.5  லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார் .அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

  • மொழித் தொழில்நுட்ப தொழில் நிறுவனங்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி

 

  • தரணியெங்கும் தமிழ், மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் நூலகங்களில் இடம்பெற ஏற்பாடு செய்யப்படும். இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு.

Tap to resize

Latest Videos

undefined

 

  • கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒரு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு, நாட்டிலேயே அகழாய்வுக்கு அதிக தொகை ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு.

 

  • கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

  • 2030க்குள் குடிசை இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். 6ஆண்டுகளில் 8 லட்சம்ன்கிரீட் வீடுகள் அமைக்கப்படும் 2024-25 இல் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 3.5  லட்சம்

 

  • 2000 புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 365 கோடி மதிப்பீட்டில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

  • 5000 ஏரி,குளங்கள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்படும்.

 

  • வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள், மருத்துவமனைகள்,ஏரிகள் சீரமைப்பு மேற்கொள்வதற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

 

  • முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

 

  • ஐந்து லட்சம் ஏழை குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்.

 

  • அடையாறு நதி சீரமைப்புக்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

 

  • பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
click me!