இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் தொடர் போராட்டம்

By Velmurugan s  |  First Published Feb 19, 2024, 10:52 AM IST

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை அரசை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் இரண்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர்.


ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 3ம் தேதி 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 16ஆம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

திண்டுக்கல்லில் பிரபல தனியார் உணவகத்தில் மோதல்; வடமாநில தொழிலாளிக்கு கத்தி குத்து - ஒருவர் கைது

Latest Videos

மீதமுள்ள மூன்று மீனவர்களில் இரண்டு பேர் படகோட்டி என்பதால் படகை இயக்கிய படகோட்டிகளுக்கு ஆறு மாதகால சிறை தண்டனையும் மற்றும் ஒரு மீனவர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்திற்காக அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை என மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனையை ஊர்காவல்துறை நீதிமன்றம் விதித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.

இந்நிலையில் பிடிபட்ட 23 மீனவர்களில் மூன்று மீனவர்களை விடுவிக்காமல் சிறைக்கு அனுப்பிய  இலங்கை நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து தங்களது படகுகளில் கருப்பு கொடி கட்டி இரண்டாவது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட ஆளுநர் ரவி.. அமித்ஷாவை சந்திக்க திட்டம்.?- காரணம் என்ன.?

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன் பிடி மற்றும் அதனை சார்ந்த தொழில் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 

மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதுவரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

click me!