மீண்டும் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்!

By SG Balan  |  First Published Feb 4, 2024, 7:33 AM IST

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் அவர்களிடன் 2 விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துவிட்டனர்.


எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் செல்லும் போது எல்லாம் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யப்படுவதும் அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் காங்கேசன்துறை எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துவிட்டனர்.

கைதான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

அஹ்லான் மோடி! அபுதாபியில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 60,000 இந்தியர்கள் முன்பதிவு!

click me!