அரசு பேருந்தை ஓட்ட ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு அழைப்பு - சிவகங்கை போக்குவரத்து கழகத்தின் பணிமனைகளில் விளம்பரப் பலகை...

 
Published : Jan 06, 2018, 09:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
அரசு பேருந்தை ஓட்ட ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு அழைப்பு - சிவகங்கை போக்குவரத்து கழகத்தின் பணிமனைகளில் விளம்பரப் பலகை...

சுருக்கம்

Call for the driver license to run the state bus - the billboard in the Sivagangai Transport Corporations workshops ...

சிவகங்கை

ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் கிளை மேலாளரை அணுகவும் என்று சிவகங்கை மாவட்ட போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணிமனைகளிலும் விளம்பர பலகை வைத்து அரசு பேருந்துகளை தற்காலிகமாக ஓட்ட அழைப்பு விடப்பட்டுள்ளது.  

"அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 இலட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு,  மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்  ஊதியத்திற்கு நிகராக சம்பளம் வழங்க வேண்டும்,

ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பலன்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை  மாலை முதல் போக்குவரத்துப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனைகளில் இருந்து நகரப் பேருந்துகள், புறநகர் பேருந்துகள் என  280-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், அண்ணா தொழிற்சங்கம் தவிர, தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களைச் சேர்ந்த சுமார் 1200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனால், மேற்கண்ட பணிமனைகளிலிருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 15-க்கும் குறைவான பேருந்துகளே நேற்று இயக்கப்பட்டன.

இதனால், கிராமப் புறங்களிலிருந்தும், நகர்ப் புறங்களிலிருந்தும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், அரசு  அலுவலர்கள், அன்றாட  பணிகளுக்காக வெளியூர் செல்லும் தொழிலாளிகள், மக்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதனிடையே, மாவட்ட ஆட்சியர் க. லதா, சிவகங்கையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு நேரடியாகச் சென்று அலுவலர்களிடம் அரசு பேருந்து இயக்கத்தின் நிலைமை  குறித்து கேட்டறிந்தார்.

மேலும், தனியார் பேருந்து மற்றும்  கனரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ள ஓட்டுநர்களை தற்காலிகமாக பணியில் அமர்த்தி, அரசுப் பேருந்தை இயக்கி  நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அறிவுறுத்தினார்.  

இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டப் போக்குவரத்து கழகத்தின் அனைத்து பணிமனைகளிலும் "ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் கிளை மேலாளரை அணுகவும்" என்று அலுவலகம் முன்பு பலகை ஒன்று வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
 

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..