ஏசி,WiFi,சிசிடிவி கேமரா... தனியார் பேருந்துக்கு சவால் விடும் அரசு பேருந்துகள் - விஜயபாஸ்கர் அறிவிப்பு!!

First Published Jul 8, 2017, 4:43 PM IST
Highlights
buses with ac wifi bed announcing vijayabaskar


படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதனப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.இதில் பங்கேற்றுப் பேசிய  அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசின் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சான வசதி கொண்ட பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்தப் பேருந்துகளில் கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படும் என கூறினார். நோயாளிகள் உள்ளிட்டோரின் வசதியை கருத்தில் கொண்டு இந்த வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்..

அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். அரசு பணிமனைகளில் ஏடிஎம் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறினார்.

இது தவிர போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் சில அறிவிப்புகளை சட்டப் பேரவையில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி குளிர்சாதன பேருந்தகளில் வைபை வசதி, மாநகர போக்குவரத்து கழகங்களில் பேட்டரி மூலம் இயங்கும் பஸ்கள். 

அனைத்து அரசு பணிமனைகளிலும் ஏடிஎம் வசதி.  அரசு போக்குவரத்து கழகங்களில் ரொக்கமில்லா பரிமாற்றம்,  தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
 

click me!